புதன், அக்டோபர் 19, 2011

மீண்டும் எழுப்பப் படுவோம் !!


وَهُوَ الَّذِي يَبْدَؤُ الْخَلْقَ ثُمَّ يُعِدُهُ وَهُوَ اَهْوَنُ عَلَيْهَ

3: 11. அல்லாஹ்வே முதரில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!



மீண்டும் எழுப்பப் படுவோம் !!
மரனித்தப்பின் மீண்டும் உயிர்ப்பிப்பதைப் பற்றிய உதாரணத்தை அல்லாஹ் விளக்குகிறான்!

பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். அல்குர்ஆன் : 41: 39

வானத்திரிருந்து பாக்கியம் மிக்க தண்ணீரை இறக்கினோம். செத்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பித்தோம். இவ்வாறே (இறந்தோரை) வெளிப்படுத்துதலும் (நிகழும்). அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியத்தையும், நீண்டு வளர்ந்த பேரீச்சை மரங்களையும் அடியார்களுக்கு உணவாக முளைக்கச் செய்தோம். அதற்கு அடுக்கடுக்காகப் பாளைகள் உள்ளன. அல்குர்ஆன்-50 : 9 ,10,11

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ''இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து ''எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். ''ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். ''அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது ''அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார். அல்குர்ஆன் -2.259


''மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி முழக்கம் தாக்கியது.21

பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம். அல்குர்ஆன் 2 : 55,56

அவனே முதரில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.அல்குர்ஆன் - 30 : 27 .

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில்1 முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். ஆல்குர்ஆன் : 21 : 104


விளக்க உரை :

தின்னமாக அல்லாஹ் தான் இந்த வாணங்கள் பூமி, அவற்றில் உள்ள படைப்புகள் ஆகிய அனைத்ததையும் உண்டாக்கியவன் அவற்றை முதன் முதலாக படைத்தவன் அவனே ! முதன் முதலாக படைக்கும் ஆற்றல் கொண்ட இறைவனுக்கு அவற்றை மீண்டும் படைப்பதற்கு முடியாமல் போகாது. இந்த பூமி பசுமையான மரமோ, செடியோ எதுவுமின்றி வறன்டு தரிசாக கிடக்கின்றது. பிறகு மழைப்பொழிந்த உடன் உயிர் பெற்று பசுமையாய்ச் சிலிர்த்தெழுகிறது. அனைத்து விதமான அழகிய தோற்றமுடைய தாவரங்கள் அதில் முளைக்கின்றன. இறந்து கிடக்கும் பூமிக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் படைத்த இறைவனுக்கு இறந்து விட்ட மனித உடலுக்கும் உயிர் கொடுத்தெழுப்பும் ஆற்றல் கண்டிப்பாக உண்டாகும், மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் எனும் டார்வின் தத்துவம் பேசும் நாத்திகவாதிகள் நீர், நிலம், நெருப்பு , காற்று , தாவர வளர்ச்சிகளைப் பற்றி வாய் திறப்பது கிடையாது. இவைகள் எங்கிருந்து தோன்றின என்ன மாதிரியான பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பவைகளை டார்வின்களும், டார்வின் ஆதரவாளர்களும் கூறியது கிடையாது. பரினாம வளர்ச்சி என்பது தொடர்ந்து ஒன்றிலிருந்து ஒன்று உலகம் முடிவுரும் காலம் வரை நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் அதற்கு பேர் தான் பரினாம வளர்ச்சியாகும். ஆனால் மனிதஇனம் என்பது லட்சோபலட்ச வருடங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் மனிதனிலிருந்து வேரொன்று தோன்றாமல் இருப்பதுவே டார்வின் தத்துவம் பொய்த்துப்போய் அல்லாஹ்வின் கூற்றே உண்மை என்பதை மேற்கானும் குர்ஆன் வசணங்கள் மூலம் விளங்கிக்கொண்டு மீண்டும் நாம் எழுப்பப் படுவோம், விசாரிக்கப் படுவோம் என்பதில் ஆழமான நம்பிக்கை வைத்து பாவங்களிலிருந்து மீண்டு அல்லாஹ்வை அஞ்சிவாழும் கூட்டத்தாரில் நம்மையும் இறைவன் சேர்த்தருள பிரார்த்திப்போமாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்