புதன், அக்டோபர் 19, 2011

மறுமையின் இன்பம்


جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ
خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ 98:8
98:8.அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

 மறுமையின் இன்பம்

மரணிக்க இருக்கின்ற நாம் அழிந்துப் போக இருக்கின்ற இந்த உலகில் இறைவனால் தடுக்கப்பட்ட தீமையான வழிகளில் மூழ்கித் திளைக்காமல் நம்பிக்கை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகவும், உற்றத் தோழர்களாகவும் மறுமை வாழ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாவும், ஏகஇறைவனை முறையாகத் தொழுது, இயன்றவரை ஹலால் - ஹராம் பேணி, நன்மைகளை ஏவித் தீமைகளைத் தடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை அடைந்தவர்களாக வாழ்ந்து வந்தால் அவர்களுக்கு மறுமையில் நிம்மதியான வாழ்வை நிரந்தரமாக்கித் தருவதாக திருமறைக்குர்ஆன் நெடுகிலும் ஏகஇறைவன் வாக்களிக்கிறான்.

''எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்'' 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி தரும் சொர்க்கத்து இன்பங்களை அறிய மாட்டார்கள்,, என்னும் திருக்குர்ஆன் 32:17 இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 3244.

அவர்களுடைய மனம் விரும்பியதையெல்லாம் அங்கு அடைந்து கொள்வார்கள், உலகில் அவர்களுடைய கண்கண் கண்டிராத, காதுகள் கேட்டிராத அனைத்து அம்சங்களையும் காணப் பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் மேற்காணும் அறிவிப்பில் கூறுகின்றார்கள்.

9:72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

44: 51, 52. (இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.

திருமறைக் குர்ஆனில் சுவனத்தைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் சொர்க்க வாசிகள் அடர்ந்த சோலைகளில் வசிப்பார்கள் என்றும், அதனருகில் நீரூற்றுக்களும், ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும் என்று பல இடங்களில் இறைவன் சொல்லிகாட்டுகிறான். பார்க்க திருமறைக்குர்ஆன் வசனங்கள் 2:74, 3:137, 3:195, 3:136, 3:198, 4:13, 4:57 5:12, 5:85, 5:119, 4:122, 7:43, 9:72, 9:89, 9:100, 10:09, 14:23,16:31, 18:31, 20:76, 22:14, 22:23, 25:10, 29:58, 47:12, 48:5, 48:17, 57:12, 58:22, 64:9, 65:11, 66:8, 85:11, 98:8,

ஒரே செய்தியை இத்தனை வசனங்களில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்படும் காரனமென்ன ?

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் அறிவித்தார். புகாரி 3250.

ஏன் என்றால் ?
உலக நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகம் மட்டுமே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உடனே இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப் போதுமானதாயிற்றே என்று கேட்டதும் உலக நெருப்பைவிட நரகநெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் என்றுக் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 3265.

சொர்க்கமும் - நரகமும்.
சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் தூரஇடைவெளி இதிகம் இருக்காது இரண்டும் அருகருகே அமைந்திருக்கும் சொர்க்க வாசிகளும், நரகவாசிகளும் ஒவ்வொருவரும் பார்த்து பேசிக்கொள்ளும் அளவே தூர இடைவெளி இருக்கும் பார்க்க திருமறைக் குர்ஆன் 7:46, முதல் 7:50 வரையிலான வசனமும், 74:38 முதல் 74:47 வரையிலான வசனமும். 

சூரியன் கியாமத் நாளில் மனிதர்களிடமிருந்து ஒரு மைல் உயரத்தில் நெருக்கமாக நிறுத்தப்படும். மக்கள் தம்தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் நிற்பார்கள். அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி) நூல்கள்: முஸ்லிம்
நரகத்தில் அளவுக்கதிகமாக நெருப்பு மூட்டப்படுவதால் அதனுடைய வெப்பமும், தரைக்கு சற்றே உயரத்தில் கொண்டு வரப்படும் சூரியனின் வெப்பமும் சேர்ந்து நரகில் கடும் சூட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும். 

தென்றல் காற்று
சுவன வாசிகள் வாழும் சொர்க்கத்தில் எந்நேரமும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்தால் தான் அதனருகில் எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கும் நரத்தின் வெப்பத்தை அது தடுக்கும் அரனாக இருக்கும்.
குளிர்நத காற்று வீச வேண்டுமெனில் அதனருகில் நதிகளும், சோலைகளும் இருந்தாக வேண்டும்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி வளர்ந்த இளம் தென்றலே என்றும் கவிஞன் பாடினான்.
 
காற்று நதியில் விழுந்து அதன் பிறகு இலை செடி,கொடிகளில் மீது விழுந்தெழும் பொழுது அது  குளிர்ந்த காற்றாக மாறுகிறது அந்த குளிர்ந்த காற்றைத் தான் தென்றல் காற்று என்றும் வர்ணித்துக் கூறுகின்றோம். 

தென்றல் பிறப்பதற்கு நதிகள், நீரருவிகள், நீரூற்றுக்கள் அமைந்திருக்க வேண்டும் என்பதால் சுவனவாசிகள் சுகமானக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வசிக்கும் ஒவ்வொரு சோலைகளின் கீழ்பகுதிகளிலும் நதிகளையும், நீரூற்றுக்களையும் நிரந்தரமாக இறைவன் ஓடச்செய்கிறான்.

குளிரும் சூரிய வெப்பம்.
ஒரே இடத்தில் வெப்பமும், குளிருமா ? அது சாத்தியப்படுமா ? என்று நினைப்பவர்களுக்கு ஒரு உதாரணம்.

கடந்த காலங்களில் எப்பொழுதாவது நீங்கள் கொடைக்கானல் சென்று வந்திருந்தால் சற்று கண்களை மூடிக் கொண்டு ஒரே ஒரு நிமிடம் ஃப்ளாஷ் பேக். 

கொடைக்கானலில் குறிப்பிட்ட சில மலைகளை சுற்றியும் அமைந்துள்ள நீரருவிகள் காரணத்தால் அதன் மேல் கொட்டும் சாரல், கொளுத்தும் வெயிலின் வேகத்தை குறைத்து உடலுக்கு குளிரை கொடுத்துக்கொண்டிருக்கும்.  

இதற்காகவே தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் சிறிது நேரமாவது உடலுக்கு குளிர்ச்சியையும், பசுமை நிறைந்த சோலைகளின் அழகை கண்ணுக்கு காட்சியாக்குவதற்காகவும் கடும் கோடையில் மக்கள் திரண்டு செல்வார்கள்.  

அத்தனைப் பெரிய சூரியனின் சூட்டை இத்தனை சிறிய சாரல் துளிகளால் எவ்வாறு தடுத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த முடிகிறது ?
அதிசயம்தான் ! 

இந்த அதிசயத்தை நாம் வாழும் காலத்தில் நிகழ்த்திக்காட்ட முடிந்த இறைவனுக்கு அவனுடைய திருப்தியைப் பெற்ற நல்லடியார்களுக்காக மறுமையில் நிகழ்த்திக் காட்டுவது கடினமா

உதாரணத்திற்கு மட்டுமே கொடைக்கானலை சுட்டிக்காட்டுகிறோம் உலகில் பல பகுதிகளில் இங்கொன்றும், அங்கொன்றுமாக இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.

இங்கொன்றும்? அங்கொன்றுமாக இப்படி அதிசயம் நடக்கும் இதே பூமியில் தான் மறுமையில் சொர்க்கத்தில் சோலைகள் அமைக்கப்பட்டு அதன் கீழ்பகுதிகளில் நீரருவிகளையும், நீரூற்றுக்களையும் ஓடச்செய்து அதிலிருந்து அள்ளி வீசும் சாரல் துளிகளும், அவற்றில் குளித்து புறப்படும் தென்றல் காற்றும் இறைவனின் திருப்திக்காக உலகில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நல்லடியார்கள் வசிக்கும் பகுதியில் நிரந்தரமாக வீசிக் கொண்டு அதனருகில் எரியும் நரகின் கடும் வெப்பத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் அதிசயம் நிகழும். 

படிப்பினைகள்
நமக்கு உயரே பல்லாயிரம் கோடி மைல் தொலைவிலிருந்து சூரியன் எரியும் பொழுதே செருப்பு அணியாமல் ஒரே ஒரு நிமிடம் நம்மால் பூமியில் நடக்க முடிவதில்லை 

சூரியன் தலைக்கு மேல் கொண்டு வரப்படும் அந்த நாளில் நம்மால் எவ்வாறு நிற்க முடியும்? நடக்க முடியும் ? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இதனால் தான் சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடத்தைப் பெறுவது உலகில் விரும்பி சேர்த்த அனைத்து செல்வங்களையும் விடச் சிறந்தது என்று பெருமானார்(ஸல்) அவர்கள் வர்னித்துக் கூறினார்கள்.

நம்மால் இயன்றளவு இன்றே நற்செயல்களை முற்படுத்தி நரக நெருப்பிலிருந்து தப்பிததுக் கொண்டு சுவனத்தின் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் நன்மக்களாக ஆக முயற்சிப்போம்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

மீண்டும் எழுப்பப் படுவோம் !!


وَهُوَ الَّذِي يَبْدَؤُ الْخَلْقَ ثُمَّ يُعِدُهُ وَهُوَ اَهْوَنُ عَلَيْهَ

3: 11. அல்லாஹ்வே முதரில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!



மீண்டும் எழுப்பப் படுவோம் !!
மரனித்தப்பின் மீண்டும் உயிர்ப்பிப்பதைப் பற்றிய உதாரணத்தை அல்லாஹ் விளக்குகிறான்!

பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். அல்குர்ஆன் : 41: 39

வானத்திரிருந்து பாக்கியம் மிக்க தண்ணீரை இறக்கினோம். செத்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பித்தோம். இவ்வாறே (இறந்தோரை) வெளிப்படுத்துதலும் (நிகழும்). அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியத்தையும், நீண்டு வளர்ந்த பேரீச்சை மரங்களையும் அடியார்களுக்கு உணவாக முளைக்கச் செய்தோம். அதற்கு அடுக்கடுக்காகப் பாளைகள் உள்ளன. அல்குர்ஆன்-50 : 9 ,10,11

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ''இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து ''எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். ''ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். ''அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது ''அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார். அல்குர்ஆன் -2.259


''மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி முழக்கம் தாக்கியது.21

பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம். அல்குர்ஆன் 2 : 55,56

அவனே முதரில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.அல்குர்ஆன் - 30 : 27 .

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில்1 முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். ஆல்குர்ஆன் : 21 : 104


விளக்க உரை :

தின்னமாக அல்லாஹ் தான் இந்த வாணங்கள் பூமி, அவற்றில் உள்ள படைப்புகள் ஆகிய அனைத்ததையும் உண்டாக்கியவன் அவற்றை முதன் முதலாக படைத்தவன் அவனே ! முதன் முதலாக படைக்கும் ஆற்றல் கொண்ட இறைவனுக்கு அவற்றை மீண்டும் படைப்பதற்கு முடியாமல் போகாது. இந்த பூமி பசுமையான மரமோ, செடியோ எதுவுமின்றி வறன்டு தரிசாக கிடக்கின்றது. பிறகு மழைப்பொழிந்த உடன் உயிர் பெற்று பசுமையாய்ச் சிலிர்த்தெழுகிறது. அனைத்து விதமான அழகிய தோற்றமுடைய தாவரங்கள் அதில் முளைக்கின்றன. இறந்து கிடக்கும் பூமிக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் படைத்த இறைவனுக்கு இறந்து விட்ட மனித உடலுக்கும் உயிர் கொடுத்தெழுப்பும் ஆற்றல் கண்டிப்பாக உண்டாகும், மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் எனும் டார்வின் தத்துவம் பேசும் நாத்திகவாதிகள் நீர், நிலம், நெருப்பு , காற்று , தாவர வளர்ச்சிகளைப் பற்றி வாய் திறப்பது கிடையாது. இவைகள் எங்கிருந்து தோன்றின என்ன மாதிரியான பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பவைகளை டார்வின்களும், டார்வின் ஆதரவாளர்களும் கூறியது கிடையாது. பரினாம வளர்ச்சி என்பது தொடர்ந்து ஒன்றிலிருந்து ஒன்று உலகம் முடிவுரும் காலம் வரை நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் அதற்கு பேர் தான் பரினாம வளர்ச்சியாகும். ஆனால் மனிதஇனம் என்பது லட்சோபலட்ச வருடங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் மனிதனிலிருந்து வேரொன்று தோன்றாமல் இருப்பதுவே டார்வின் தத்துவம் பொய்த்துப்போய் அல்லாஹ்வின் கூற்றே உண்மை என்பதை மேற்கானும் குர்ஆன் வசணங்கள் மூலம் விளங்கிக்கொண்டு மீண்டும் நாம் எழுப்பப் படுவோம், விசாரிக்கப் படுவோம் என்பதில் ஆழமான நம்பிக்கை வைத்து பாவங்களிலிருந்து மீண்டு அல்லாஹ்வை அஞ்சிவாழும் கூட்டத்தாரில் நம்மையும் இறைவன் சேர்த்தருள பிரார்த்திப்போமாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்